Diploma In Human Rights 2025 – Eastern University of Sri Lanka
மனித உரிமைகளில் டிப்ளோமா
(Diploma in Human Rights)-(SLQF Level 3)
கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையமானது கலை கலாசார பீடத்துடன் இணைந்து “மனித உரிமைகளில் டிப்ளோமா” ஒரு வருட கால கற்கைநெறியை வழங்கவிருக்கின்றது.
நுழைவுத் தகமைகள்
-
- a) க.பொ.த. உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் மூன்று பாடங்களில் (புதிய பாடத்திட்டம்) அல்லது நான்கு பாடங்களில் (பழைய பாடத்திட்டம்) சித்தி பெற்றிருத்தல் அல்லது அதற்குச் சமமான தகைமை பெற்றிருத்தல்.
அல்லது
-
- b) கிழக்குப் பல்கலைக்கழகம் கலை கலாசார பீட அவையால் நிர்ணயிக்கப்பட்டு பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற ளுடுஞகு மட்டம் 2 இற்குச் சமமான மனித உரிமைகள் சான்றிதழ் படிப்பை பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
- c) ஏதேனும் ஒரு துறையில் NVQ Level 4 சான்றிதழ் பெற்றிருத்தல்.
குறிப்பு:
- · முதலாவது நுழைவுத் தகைமைப் பிரிவின் அடிப்படையில் போதுமானளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதவிடத்து, மட்டுமே ஏனைய இரு தகைமைப் பிரிவுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- · மனித உரிமைகள் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிரூபிக்கக்கூடிய ஈடுபாட்டுடன், அரச அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மொழி மூலம் | : தமிழ் |
பாடநெறிக்காலம் | : 1வருடம் (வார இறுதி நாட்கள்) |
கற்பித்தல் முறை | : நேரடி |
கற்கைநெறிக் கட்டணம் | : ரூபா 65000.00 (இரண்டு தவணையில் செலுத்தலாம்) |
விண்ணப்பிக்கும் முறை::
விண்ணப்பதாரிகள் http://www.cedec.esn.ac.lk/diploma என்ற வலைத்தளத்திலுள்ள நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு வைப்பிலிட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பணம் வைப்பிலிட வேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.
அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் (ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு கிடைக்கப்பெற்ற),அதனுடன் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களுடன் மற்றும் வைப்புச் சீட்டின் வாடிக்கையாளர் நகலையும் தபால் மூலம் கீழுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல் இடது மூலையில் பாடநெறியின் தலைப்பைக் குறிப்பிடவும்.
சிரேஸ்ட உதவிப் பதிவாளர்வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
இல 50, புதிய வீதி, மட்டக்களப்பு. For further information: Senior Assistant Registrar, CEDEC,
No. 50, New Road, Batticaloa.
TP: 065-2227025
Email: cedecinfo@esn.ac.lk
Web: http://www.cedec.esn.ac.lk
Notice – Tamil | Download |
Application | Apply Online |
Paying Voucher | Download |
Guide | Download |
WhatsApp Group | Join for Updates |
Diploma In Human Rights 2025 – Eastern University of Sri Lanka
Ad-Dip in Human Rights-b1-2025