Northern Province MSO Open Exam 2025

Northern Province MSO Open Exam 2025

Northern Province MSO Open Exam 2025

Open Competitive Examination for Recruitment to Grade III of Provincial Management Service Officer Service in Northern Province – 2025

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2025

அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் அவர்களின் CP/DEC/25 இலக்க 2025.07.16ம் திகதிய கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள 2025.07.07ம் திகதிய அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தின் பிரகாரம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் அவர்களினது NP/02/01/RECRUITMENT/GENERAL இலக்க 2025.07.18ம் திகதிய கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாண பிரதம செயலாளரினது NP/01/02/07/01/01 இலக்க 2025.07.21ம் திகதிய சிபார்சுக்கு அமைவாகவும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் G/NPC/A14/PPSC/Req/2025 இலக்க 2025.08.06ம் திகதிய கடிதம் மூலம் கிடைக்கப்பெற்ற அனுமதிக்கமைவாகவும், வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கு காணப்படும் நூற்று இருபத்தைந்து (125) வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது, வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2025ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.09.19 ஆகும்.

  1. ஆட்சேர்ப்பிற்கான சேவை நிபந்தனைகள்

02.1: 2013.04.02 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப்பெறும் வகையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்ட மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை பதவிக்குரிய சேவைப்பிரமாணக் குறிப்பு, அவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களிற்கு அமையவும் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகள், தாபனவிதிக்கோவை ஏற்பாடுகள், நிதிப்பிரமாணங்கள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1817/30ம் இலக்க 2013.07.03ம் திகதிய அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை மற்றும் இப்பதவியுடன் தொடர்புபட்டு, காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் விதிகள், கட்டளைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டு, தெரிவு செய்யப்படும் பரீட்சார்த்திகள் குறித்த மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை பதவியின் தரம் III இற்கு நியமிக்கப்படுவர்.

02.2 இப் பரீட்சையில் சித்திபெற்ற பரீட்சார்த்திகள் நியமனத் திகதியிலிருந்து மூன்று வருடங்களிற்கு தகுதிகாண் அடிப்படையில் நியமிக்கப்படுவர். இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதிய உரித்துடையதுமாகும். சேவைப் பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை பதவியில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட திகதியிலிருந்து மூன்று (03) வருட காலத்திற்குள் முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியெய்தல் வேண்டும்.

இச்சேவை இடமாற்றத்திற்குட்பட்ட சேவையாகும். இதனால் இந் நியமனம் பெறுபவர்கள் வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்ற வேண்டுமென்ற நிபந்தனைக்கும் கீழ்ப்படிதல் வேண்டும். ஒரு சேவை நிலையத்தில் நியமனம் பெறுபவர், அதே சேவை நிலையத்தில் குறைந்தது ஐந்து (05) வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றுதல் வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். 02.5 அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 18/2020 மற்றும் இது தொடர்பாக தொடர்ந்து வரும் சுற்றறிக்கைகள் என்பவற்றுக்கமைய நியமனத் திகதியிலிருந்து மூன்று (03) வருடங்கள் முடிவதற்கு முன்னர் குறித்துரைக்கப்பட்ட இரண்டாவது அரச கரும் மொழியில் தேர்ச்சி பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

02.6 திறந்த போட்டிப்பரீட்சை மூலம் நியமிக்கப்படவுள்ள ஆட்களின் மொத்த எண்ணிக்கை நூற்று இருபத்தைந்து (125) ஆகும். நியமனங்களின் எண்ணிக்கை மற்றும் நியமனம் அமுலுக்கு வரும் திகதி என்பன நியமன அதிகாரியினால் வரையறுக்கப்படும். அறிவிக்கப்பட்ட இவ் வெற்றிடங்கள் தொடர்பில் பகுதியளவு வெற்றிடங்கள் அல்லது சகல வெற்றிடங்களையும் நிரப்பாது விடுவதற்கான அதிகாரத்தினை நியமன அதிகாரி கொண்டுள்ளார்.

  1. சம்பள அளவுத்திட்டம் :-

2025க்கு ஏற்ப அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025க்கு அமைவான, சம்பளத் தொகுதி MN 2 – மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை பதவியின் தரம் – III இற்கான திரட்டிய சம்பள அளவுத் திட்டமானது ரூபா 48,470 – 10 x 540 – 11 x 630 – 10 x 1,010 10 x 1,190 82,800/-

Cir-T

 

Notice – Tamil Download
Notice – Sinhala Downlaod
Application – Tamil Download
Application – Sinhala Download
Closing Date 2025.09.19
WhatsApp Group Join for Updates

Northern Province MSO Open Exam 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *