South Eastern University BA External Degree Application 2025

South Eastern University BA External Degree Application 2025

South Eastern University BA External Degree Application 2025

இலங்கை தென்கிழக்குப் பல ;கலைக்கழகம் வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையம் (CEDPL)

கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2022 / 2023
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 18.08.2025 வரை ஏற்றுக் கொள்ளப்படும்

தேவைப்படும் தகைமைகள் :
க.பொ.த. (உஃத) பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் (2022 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்திய பரீட்சை) ஆகக்குறைந்த சித்திகளுடன் பொதுச் சாதாரணப் பரீட்சையில் (General Common Test) குறைந்தபட்சம் 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அத்துடன் க.பொ.த. (சா/த) பரீட்சையில் கணிதம ;, தமிழ் உட்பட ஆறு பாடங்களில் இரண்டு அமர்வுக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

கட்டணம் : ரூபா. 150, 000.00

மொழி மூலம் : கற்கைநெறியின் முதலாம் வருடம் தமிழ் மொழியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்கள் தமிழ் ஆங்கில மொழிகளிலும் (Bilingual) நடைபெறும்.

தெரிவு செய்யப்படும் முறை : நேர்முகப்பரீட்சை மற்றும் நுழைவுப்பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி : 18.08.2025

குறிப்பு:

  • செலுத்தப்பட்ட கட்டணங்கள் எக்காரணங்கள் கொண்டும் மீளளிக்கப்படமாட்டாது.
  • பூரணப்படுத்தப்படாத அல்லது தாமதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சிரேஷ்ட உதவி பதிவாளர்
வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில்
2025.07.18

கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2022 ஃ 2023

விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்கள்

பின்வரும் அறிவுறுத்தல்களை வாசித்த பின்னர் விண்ணப்ப படிவத்தினை நிரப்பவும்:

01. விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தை செயற்படுத்துவதற்கான கட்டணம் ரூபா 1,500.00 ஆகும்.

இக்கட்டணத்தினை, பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற பற்றுச் சீட்டினை (Paying-In-Voucher – PIV) பூரணப்படுத்தி எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் கணக்கு இலக்கம் 228-1001-6000-1692 ற்கு செலுத்த முடியும்.

அத்துடன் வங்கியினால் மீள் அச்சிடப்பட்ட (Reprint) பற்றுச்சீட்டுப் பிரதியை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழக இணையத்தளத்திலுள்ள விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்வதோடு அதனை பூர்த்தி செய்து சிரேஷ்ட உதவி பதிவாளர், வெளிவாரி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையம்,  இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்பு – 2022 / 2023” எனக்குறிப்பிட வேண்டும். அத்துடன் இணையத்தளத்திலுள்ள https://docs.google.com/forms/d/e/1FAIpQLSckBOrK8MVFO2gMdwv3uIDFU3MUMgSx7cc2Tl3soQBL0xTIIw/viewform  யினை தவறாது நிரப்புதல் வேண்டும்.

02. கட்டண விபரம

 

கட்டண விபரம் தொகை (Rs.)
விண்ணப்பத்தை செயற்படுத்தல் 1,500.00
முதலாம் வருடம் 50,000.00
இரண்டாம் வருடம் 50,000.00
மூன்றாம் வருடம் 50,000.00
மொத்தம் 151,500.00

(இக்கற்கை நெறிக்கட்டணமானது கருத்தரங்கு, தொடர்மதிப்பீடு, பருவப் பரீட்சை, பதிவுப்புத்தகம் போன்ற அனைத்து வகையான கட்டணங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது)

03. மொழி

கற்கைநெறியின் முதலாம் வருடம் தமிழ் மொழியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்கள் தமிழ் ஆங்கில மொழிகளிலும் (Bilingual) நடைபெறும்.

குறிப்பு
இப்பாட நெறியில் உள்ளடக்கப்பட்டடுள்ள பாடங்கள் பின்வருமாறு 03 தொகுதிகளாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு பாடத்தினை கட்டாயம் தெரிவு செய்தல் வேண்டும்

முதலாவது தொகுதி  இரண்டாவது தொகுதி மூன்றாவது தொகுதி
Sociology
Political Science
Geography
Philosophy
Economics
English Literature
GIS
Information
Communication
TechnologyHindu Civilization
History
Tamil Statistics
TESL (Teaching
English as a Second
Language)

Public Administration
(Students could choose
Either Political Science
or Public
Administration, not
Both) Education

 

Notice – Tamil Download
Instruction Download
Application (Manual) Download
Application (Google Form) Apply Online
Paying Voucher Download
Closing Date 2025.08.18
WhatsApp Group Join Here

South Eastern University BA External Degree Application 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *