Station Master Open Exam 2025
இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் – IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் திறந்த போட்டிப்பரீட்சை – 2025
Station Master
Notice – Tamil | Download |
Application (Pending) | Download |
Closing Date | 2025.07.14 |
WhatsApp Group | Join Here |
இலங்கை புகையிரத திணைக்கத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவியில் நிலவும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2025.07.14ம் திகதியன்று வயது வருடம் 18க்கு குறையாததும் 30க்கு விஞ்சாத இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. ( அதன் படி விண்ணப்பம் முன் வைக்க முடிவது 2007.07.14ஆந் திகதி அல்லது அதற்கு முன்பு மற்றும் 1995.07.14ம் திகதி அல்லது அதற்கு பின்பு பிறந்த திகதியை உடையவர்களுக்கு மாத்திரமேயாகும்). விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி திகதி 2025.07.14 ஆகும். இப்பரீட்சை 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சகல விண்ணப்ப படிவங்களும் அத்திகதிற்கு முன்பு ”பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், , இலங்கை பரீட்சைத் திணைக்களம், நிறுவன பரீட்சை மற்றும் திட்டமிடல் கிளை, தபால் பெட்டி இலக்கம் 1503, கொழும்பு” எனும் முகவரிக்கு பதிவு தாபல் மூலம் அனுப்பி வைத்தல் வேண்டும்.
சம்பள அளவுத்திட்டம் – புகையிரத நிலைய அதிபர் – தரம் III ஆம் தரத்திற்கான சம்பள அளவுத்திட்டம் 57,810-5×890-5×1030-5×1300-10×1340-6 = 93,810/=
கல்வித் தகைமைகள் –
(i) சிங்களம்/தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு பாடங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன், ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க.பொ.த.(சா./த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
(ii) க.பொ. த. (உ/த) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் (பொதுவான பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல், பழைய பாட சிபாரிசின்கீழ் மூன்று (03) பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.!
இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் – IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் திறந்த போட்டிப்பரீட்சை – 2025
உடற்தகுதி-
சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கான சிறந்த உடற் தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் கடமைகளை மேற்கொள்ளக் கூடியளவுக்கு போதுமான உடற் தகுதிகளையும் உளத் தகுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.
உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
6/6 அளவு கண்பார்வை சோதனையிலும் சித்தியடைய வேண்டும்.
வயது: 18 – 30
வேறு தகைமைகள்.-
(i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ii) விண்ணப்பதாரி சிறந்த குணநலமுடையவராக இருத்தல் வேண்டும்.
(III) ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
- Expected Exam Date: September 2025
- Total No. of Vacancies: 106
ஆட்சேர்ப்பு செய்யும் முறை – திறந்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை நடாத்தி, விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் திறமையின் ஒழுங்கு வரிசையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
பரீட்சை வினாத்தாள்கள்
01. மொழித்தேர்ச்சி – 01 மணி 30 நிமிடம்
02. நுண்ணறிவு – 01 மணித்தியாலம்
Station Master Open Exam 2025