North Western MSO Open Exam 2026
வடமேல் மாகாண சபை – முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை (MSO) தரம் III ஆட்சேர்ப்பு – 2026
1. வேலைவாய்ப்பு தொடர்பான அடிப்படை விபரங்கள்
பதவியின் பெயர் | முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO)
- சேவை | வடமேல் மாகாண சபை அரச சேவை
- தரம் | தரம் III
- ஆட்சேர்ப்பு முறை | திறந்த போட்டிப் பரீட்சை
- ஆட்சேர்ப்பு ஆண்டு | 2026
- எதிர்பார்க்கப்படும் வெற்றிடங்கள் | 239
- பரீட்சை நடைபெறும் காலம் | 2026 டிசம்பர்
- பரீட்சை மொழிகள் | தமிழ், சிங்களம், ஆங்கிலம்
- விண்ணப்பிக்கும் முறை | இணையவழி (Online)
- விண்ணப்பக் கட்டணம் | ரூ. 600
- பதவியின் தன்மை | நிரந்தரமானது
- ஓய்வூதியம் உரித்துடையது
முக்கிய குறிப்பு: 239 வெற்றிடங்களும் கட்டாயமாக நிரப்பப்படும் என்று உறுதியளிக்கப்படவில்லை. நிரப்பப்படும் பதவிகளின் எண்ணிக்கையையும் நியமனம் அமுலுக்கு வரும் திகதியையும் நியமன அதிகாரி தீர்மானிப்பார்.
2. விண்ணப்பிக்கும் திகதிகள்
- இணையவழி விண்ணப்பம் ஆரம்பமாகும் திகதி # 02.11.2026 முற்பகல் 09.00 மணி
- விண்ணப்ப முடிவுத் திகதி # 15.11.2026 இரவு 09.00 மணி
- பரீட்சை நடைபெறும் காலம் டிசம்பர் 2026
விண்ணப்பங்களை இணையவழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்:
விண்ணப்பப் படிவம் இணையத்தளத்தின் Our Services → Online Applications – Recruitment Exams/E.B. Exams பகுதியில் வெளியிடப்படும்.
முக்கியம்: இணையவழி விண்ணப்பம் ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
3. வயதெல்லை
விண்ணப்ப முடிவுத் திகதியான 15.11.2026 அன்று விண்ணப்பதாரர்:
– குறைந்தபட்ச வயது: 18 வருடங்கள்.
– அதிகபட்ச வயது: 30 வருடங்கள்.
|பிறந்த திகதி | தகுதி |
| 15.11.1996 அல்லது அதற்குப் பின்னர் | தகுதியுடையவர்
| 15.11.2008 அல்லது அதற்கு முன்னர் | தகுதியுடையவர் |
அதாவது 15.11.1996 முதல் 15.11.2008 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. கல்வித் தகைமைகள்
விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கல்வித் தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L)
பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
– ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
– அவற்றில் நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.
– மொழிப்பாடம் (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்) மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்.
2. க.பொ.த. உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L)
– உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்திருக்க வேண்டும்.
– பொது அறிவுப் பரீட்சை (General Common Test) மற்றும் பொது ஆங்கிலம் (General English) ஆகியவை இதற்கு விதிவிலக்காகும்.
முக்கிய குறிப்புகள்:
1. சாதாரண தரத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டிய மொழிப்பாடமாக, விண்ணப்பதாரர் போட்டிப் பரீட்சைக்குத் தெரிவுசெய்யும் மொழி கருதப்படும்.
2. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு இணையான வெளிநாட்டு அல்லது உள்நாட்டு கல்வி நிறுவனங்களின் தகைமைகள் தொடர்பில் இறுதி முடிவு நியமன அதிகாரியினால் எடுக்கப்படும்.
3. விண்ணப்பதாரர் அனைத்து தகைமைகளையும் 15.11.2026 அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
5. ஏனைய பொதுத் தகைமைகள்
விண்ணப்பதாரர்கள்:
1. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. சிறந்த நற்பண்புகளைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
3. வடமேல் மாகாணத்தின் எந்தவொரு இடத்திலும் பணியாற்றுவதற்குப் போதுமான உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
4. இப்பதவிக்குரிய கடமைகளைச் செய்வதற்கான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
11. போட்டிப் பரீட்சை முறைமை
இப்பரீட்சை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பொருத்தமான ஒரு மொழியைத் தெரிவுசெய்ய வேண்டும். தெரிவுசெய்த மொழியைப் பின்னர் மாற்ற முடியாது.
பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டது.
## பரீட்சை அமைப்பு
வினாத்தாள் 01
மொழித் திறன் – 100 புள்ளிகள் 2½ மணித்தியாலங்கள்
வினாத்தாள் 02
உளச்சார்புத் திறன் – 100 புள்ளிகள் 1 மணித்தியாலம்
மொத்தப் புள்ளிகள் 200
வினாத்தாள் 01 – மொழித் திறன் (Language Ability)
– மொத்தப் புள்ளிகள்: 100
– நேரம்: 2½ மணித்தியாலங்கள்.
– அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
| Notice – Sinhala | Download PDF |
| Notice – English | Pending |
| Notice – Tamil | Pending |
| Application | Apply Online |
| Closing Date | 2026.11.15 |
| வழிகாட்டல் குழுமம் | Join Here |

