Fuel Pass FAQ in Tamil

Fuel Pass FAQ in Tamil

Fuel Pass FAQ in Tamil

1. என் வாகனமும் என் மொபைல் எண்ணும் மாற்றப்படவில்லை. எனது பழைய QR code ஐ தொடர்ந்து பயன்படுத்தலாமா?
ஆம். உங்கள் பழைய QR code இன்னும் செல்லுபடியாகும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ணையதளத்தில் Login செய்து உங்கள் QR code ஐ பெறலாம்.

 

2. முந்தைய உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட QR code கொண்ட வாகனத்தை நான் வாங்கியுள்ளேன். புதிய உரிமையாளராக நான் QR code ஐ எவ்வாறு பெறுவது?
நீங்கள் வாகனத்தை இணையதளத்தில் மீண்டும் Register செய்ய வேண்டும். அதன்பின் புதிய QR Code கிடைக்கும். இது 2026 மார்ச் 17 முதல் கிடைக்கும்.

 

3. என் வாகனத்தின் உரிமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி (OTP மூலம் உறுதிப்படுத்தி) Login செய்து “Delete Profile” தேர்ந்தெடுத்து பழைய QR code ஐ நீக்கவும். அதன்பின் புதிய உரிமையாளர் இணையதளத்தில் மீண்டும் Register செய்து புதிய QR code பெறலாம். பின்னர் நீங்கள் அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி புதிய வாகனத்தை Register செய்து QR code பெறலாம். இது 2026 மார்ச் 17 முதல் கிடைக்கும்.

 

4. என்மொபைல் number நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் Recycled ஆகி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் வாகனத்தை இணையதளத்தில் மீண்டும் Register செய்ய வேண்டும். அதன்பின் புதிய QR code கிடைக்கும். இது 2026 மார்ச் 17 முதல் கிடைக்கும்.

 

5. நான் சமீபத்தில் வாங்கிய புதிய வாகனத்திற்கு QR code எவ்வாறு பெறுவது?
அனைத்து புதிய வாகனங்களும் Fuel Pass இணையதளத்தில் Register செய்யப்பட வேண்டும். ஏதேனும் பிழை ஏற்பட்டால் 2026 மார்ச் 17 அன்று மீண்டும் முயற்சிக்கவும்.

 

6. Register செய்யும்போது “Chassis number is incorrect” என்ற பிழை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
வாகனத்தின் உரிமையாளர் மோட்டார் போக்குவரத்து துறை (DMT) மூலம் விவரங்களை சரிசெய்ய வேண்டும்.

 

7. Register செய்யும்போது “Vehicle Already Registered” என்ற பிழை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மன்னிக்கவும். தயவுசெய்து 2026 மார்ச் 17 அன்று மீண்டும் முயற்சிக்கவும்.

 

8. 50cc க்கும் குறைவான வாகனங்களை எப்படி பதிவு செய்வது? மோட்டார் போக்குவரத்து துறையில் (DMT) பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் QR Fuel Pass பெற முடியும்.

 

10. Fuel Pass இணையதளம் வேலை செய்யவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
Fuel Pass இணையதளம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தற்காலிக தொழில்நுட்ப சிக்கல் இருந்தால் சில நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் இணையதளத்தை அணுக முயற்சிக்கவும்.

 

11. OTP 2 நிமிட காலவரம்பு முடிந்த பிறகு வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
OTP காலாவதியான பிறகு வந்தால் Resend பொத்தானை அழுத்தி புதிய OTP பெறலாம்.

 

12. ஒரே NIC இல் பல வாகனங்களை பதிவு செய்ய முடியவில்லை.
என்ன செய்ய வேண்டும்? தற்போது Fuel Pass முறையில் ஒரு NIC மற்றும் ஒரு மொபைல் எண்ணிற்கு ஒரு வாகனம் மட்டுமே பதிவு செய்ய முடியும். மற்றொரு வாகனத்தை பதிவு செய்ய வேறு NIC மற்றும் வேறு மொபைல் எண் பயன்படுத்த வேண்டும்.

 

13. ஜெனரேட்டர் போன்ற வாகனமல்லாத பயன்பாட்டிற்கு Fuel QR code பதிவு செய்ய முடியுமா? தற்போது Fuel Pass முறை வாகன பதிவுகளுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனமல்லாத பயன்பாட்டிற்கு எரிபொருள் வழங்குவது குறித்து இலங்கை அரசின் எதிர்கால தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

 

14. Fuel Pass பயன்படுத்த Smartphone அவசியமா?
Smartphone அவசியமில்லை. Smartphone அல்லது Computer உள்ள ஒருவரின் உதவியுடன் பதிவு செய்யலாம். பதிவு செய்த பிறகு QR code ஐ print செய்து பயன்படுத்தலாம்.

 

 

15. Fuel Pass இணையதளம் பல மொழிகளை ஆதரிக்கிறதா? ஆம். Fuel Pass இணையதளம் Sinhala, Tamil மற்றும் English மொழிகளை ஆதரிக்கிறது.

 

16. என் வாகனத்தின் Chassis number எங்கு கிடைக்கும்? Chassis number கீழ்க்கண்ட இடங்களில் காணலாம்:

 

  • Vehicle Registration Certificate (CR Book)
  • Vehicle Insurance ஆவணம்
  • வாகனத்தில் குறிப்பிடப்பட்ட இடம்

 

17. பிரச்சினைகள் இருந்தால் உதவி பெற எண் உள்ளதா?
Fuel Pass தொடர்பான உதவிக்கு தற்போது 1919 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் உதவி சேனல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

 

18. சுற்றுலா மற்றும் வணிக வாகனங்களுக்கு அதிக எரிபொருள் தேவை. தனி quota வழங்கப்படுமா?
சுற்றுலா மற்றும் வணிக போக்குவரத்து போன்ற துறைகளின் தேவைகளை அரசு பரிசீலிக்கும். அதன்படி தேவையான ஆதரவு அல்லது மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.

Fuel Pass FAQ in Tamil Download PDF
WhatsApp Group Join Our Group